Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்ட தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன் மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக கூறப்படுகிறது

குமார் சங்கக்கார அனைத்து இன மக்களும் விரும்புகின்ற ஒரு விளையாட்டு வீரராக விளங்குவதால் இந்த வெற்றியினை உறுதிப்படுத்துக் கொள்ள முடியும் என்பதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்பொழுது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வரும் குமார் சங்கக்கார இந்த விடயம் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

 

About அகமுகிலன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: