Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள-பாரத பிரதமர் நரேந்திர மோடி

இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள-பாரத பிரதமர் நரேந்திர மோடி

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை (09) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், நாட்டிற்கு வருகை தரும் முதலாவது வௌிநாட்டுத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையுடனான நட்புறவு மற்றும் நம்பிக்கையை வௌிப்படுத்துவதற்கான தௌிவான சமிக்ஞையாக பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அமையும் என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் இலங்கைக்கான மூன்றாவது விஜயமாக இது அமையவுள்ளது.

நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், பிரதமர் மோடிக்கான மதிய போசனமும் ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையுடன் மிக நீண்டகாலமாக சிறந்த நட்புறவை பேணிவருவதாக பாராத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இரண்டாவது முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி கடந்த வாரம் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது, நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையுடன் கைகோர்த்து செயற்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் காரணமாக கொழும்பு நகரில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: