Home / உள்நாட்டு செய்திகள் / இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்க தீர்மானம்!!

இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்க தீர்மானம்!!

இயற்கை அனர்த்தங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகையை 2,50,000 ரூபா வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என, அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழப்போருக்கு தற்போது ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையே வழங்கப்படுகின்றது.

இதனிடையே, இயற்கை அனர்த்தங்களினால் முற்றுமுழுதாக வலுவிழப்போருக்கான நிவாரணத்தொகை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து 2,50,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயற்கை அனர்த்தங்களின்போதும், உடனடி நிவாரணங்களுக்காக ஒதுக்கப்படும் 100 இலட்சம் ரூபாவிலிருந்து 250 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமிந்த பதிராஜ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ...

%d bloggers like this: