Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 29/07/2019

இன்றைய நாள் எப்படி 29/07/2019

மேஷம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். சிலருக்கு கவனக்குறைவால் பணம், பொருள் தவற நேரிடலாம்.

ரிஷபம்: யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் செலவுக்காக கடன் வாங்குவர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மிதுனம்: நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிப்பது நல்லது. பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம்: பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு காண்பர். பெண்களுக்கு ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்: பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். தொழில் வளர்ச்சிக்கான அனுகூல சூழல் அமையும். வருமானம் திருப்தியளிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கன்னி: எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இயங்கும். லாபமும் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் அவசியம். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

துலாம்: பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவால் கடன் அடைபடும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: வசீகரத் தன்மையுடன் பேசுவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தனுசு: திகைப்பு தந்த பணி கூட எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை பெருகும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை பெறுவர். குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மகரம்: மற்றவர் மீது அதிருப்தி எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் குறையை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும்.

கும்பம்: செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவில் இருந்த மந்தநிலை விலகும்.அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

மீனம்: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். மனதில் நிம்மதி நிலைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். வருமானம் உயரும். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபடுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 04/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி, 4.12.19 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: