Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/05/2019

இன்றைய நாள் எப்படி 22/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 8ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி,
22.5.19 புதன்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி, நாளை அதிகாலை 4:16 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, பூராடம் நட்சத்திரம் நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு.

 

மேஷம் : எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். உடல் நலத்திற்கு சீரான ஓய்வு அவசியம்.

ரிஷபம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

மிதுனம் : மனதில் ரசனையான எண்ணங்கள் மிகுந்திருக்கும். மிகவும் நேர்த்தியாக பணியாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: நண்பரிடம் முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமான அளவில் வந்து சேரும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

சிம்மம் : உங்கள் மனதில் சஞ்சலம் தோன்றி விலகும். நண்பர் வாங்கும் பொருளுக்கு நீங்கள் பேரம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஓவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கன்னி : உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். சொந்த பணியில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சியின் மூலம் பயன் பெறுவீர்கள். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : உங்கள் செயல்களில் சுதந்திர மனப்பாங்கு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். அதிக பணவரவு பெறுவீர்கள். குடும்ப பிரச்சினையில் சுமூக தீர்வு கிடைக்கும். மனதில் நிம்மதியும் ,பெருமிதமும் ஏற்படும்.

விருச்சிகம் : கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோனை நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவு இருக்கும். குடும்பத் தேவைகளுக்கான பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

தனுசு : இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி விற்பனையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர் நிர்வாக நடைமுறை சிறக்க நல்ல கருத்து சொல்வீhகள்.

மகரம் : குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை தேவை. தொழிலில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்று சரிசெய்வது நல்லது. எதிர்பாராத வகையில் பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

கும்பம் : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். குறித்த காலத்தில் பணி நிறைவேறும். தொழில், வியாபாரம் திருப்திகரமாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

மீனம் : நண்பர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: