Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/09/2019

இன்றைய நாள் எப்படி 21/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 4ம் தேதி, மொகரம் 21ம் தேதி,
21.9.19 சனிக்கிழமை தேய்பிறை, சப்தமி திதி மாலை 4:17 வரை
அதன் பின் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 8:37 வரை
அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 — 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 — 3:00 மணி
குளிகை : காலை 6:00 — 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கேட்டை
பொது : புரட்டாசி சனி, பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம் : மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்ல மாற்றம் உருவாக உதவும். தொழில் வளர்ச்சி பெற அதிக நேரம் பணி புரிவீர்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

ரிஷபம் : குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

மிதுனம் : எதிர்பாராத வகையில் சிரமம் வரலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்வதை தவிர்க்கவும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : மனதில் பிறர் நலன் பற்றிய அக்கறை வளரும். உறவினர் புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர். தொழிலில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறைந்து பதவி பெற வாய்ப்பு வரும்.

சிம்மம் : பணி திறமையை வளர்த்து கொள்வீர்கள். முக்கியமான செயலில் அதிக நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். தாராள பண வரவில் சேமிப்பு கூடும். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

கன்னி : சூழ்நிலையின் தாக்கம் மனதில் குழப்பம் உருவாக்கலாம். நண்பர் சிறு அளவில் உதவுவார். அதிக உழைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். ஆடம்பர பணச்செலவு தவிர்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

துலாம் : பரிகாசத்துடன் பேசுபவரிடம் விலகி சுய கவுரவம் பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : முக்கிய பணி நிறைவேற அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமான அளவில் வந்து சேரும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

மகரம் : சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும். பண வரவு குறைந்த அளவில் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : உங்கள் வாழ்வின் நன்மை மற்றும் சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றவும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

மீனம் : பணிகளில் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: