Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 21/06/2019

இன்றைய நாள் எப்படி 21/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 6ம் தேதி, ஷவ்வால் 17ம் தேதி,
21.6.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 7:08 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, திருவோணம் நட்சத்திரம் மாலை 6:33 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00-4:30 மணி
குளிகை : காலை 7:30-9:00 மணி
சூலம் : மேற்கு க்ஷ

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
பொது : திருவோணவிரதம்.பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்.

 

மேஷம்: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

மிதுனம்: சிலர் உங்கள் மீது அவதூறு சொல்லலாம்; அவற்றை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விற்பனை சீராகும். வரவுக்கேற்ப புதிய செலவினங்கள் உருவாகும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.

கடகம்: மனதில் தன்னம்பிக்கை வளரும். இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவைப் பணம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம்: முக்கிய விஷயத்தில் சுமுகத்தீர்வு ஏற்படும். கூடுதலாக உருவாகிற பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தகு முன்னேற்றம் காணப்படும். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

கன்னி: சமூக நிகழ்வு மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் நம்பிக்கையை தரும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

துலாம்: குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதமாகலாம். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். அதிகவிலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாப்;பது நல்லது.

விருச்சிகம்: மனதில் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி பணவரவில் கொஞ்சம் தானம், தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

தனுசு: கடந்தகால அனுபவம் நல்ல படிப்பினையைத் தரும். தொழில் சார்ந்த அனுகூலம் பாதுகாப்பீர்கள். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்: நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழில் வியாபார இலக்கு எளிதில் பூர்த்தியாகும். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

கும்பம்: பணிகளில் குளறுபடி ஏற்படலாம்; தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும்.

மீனம்: சிலர் பிறரை விமர்சிக்க உங்களைத் தூண்டுவர்; தேவையற்ற விவகாரம் பேச வேண்டாம். தொழில் உற்பத்தி, விற்பனை மந்தமாக இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: