Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/05/2019

இன்றைய நாள் எப்படி 20/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 6ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி,
20.5.19 திங்கட்கிழமை தேய்பிறை, துவிதியை திதி, இரவு 2:53 வரை;
அதன்பின் திரிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:58 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : சிவன் வழிபாடு.

 

மேஷம் : எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ரிஷபம் : வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணசேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மிதுனம் : நியாயம், தர்மத்துடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: இஷ்ட தெய்வத்தின் கருணையால் சில நன்மைகள் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. தியானம் தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

சிம்மம் : செயலில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி : பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும், நன்மையும் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.

துலாம் : மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணியை முடிப்பது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

விருச்சிகம் : சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். பணவரவு உண்டு. இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

தனுசு : உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பர். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கேற்ற வளர்ச்சி உண்டு. நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

மகரம் : மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பெறுகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் : உங்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம்மாறி போவர். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர் உங்களின் பொறுப்பை உணர்த்துவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். பணவரவு கூடுதலாக கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: