Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி,
19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி காலை 6:35 வரை;
அதன் பின் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:22 வரை;
அதன் பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00-4:30 மணி
குளிகை : காலை 7:30-9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை சரி செய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும்.

ரிஷபம்: தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும்.குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும் பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்: இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

கடகம்: மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடையும். கூடுதல் வருமானத்தால் சேமிப்பு கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: சிலரது வீண்பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரம் சீராக இருக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம்: பேச்சு, செயலில் உறுதி நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். பணவரவு அளவுடன் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை தவிர்க்கவும்.

தனுசு: நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் பலம் பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்துடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம்: உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

கும்பம்: முக்கியமான செயல் தடையின்றி நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். இளமைக்கால நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம்: அடுத்தவர் வியக்கும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய நன்மை உருவாகும். பணவரவு திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...