Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/06/2019

இன்றைய நாள் எப்படி 19/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 4ம் தேதி, ஷவ்வால் 15ம் தேதி,
19.6.19 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி மாலை 4:07 வரை;
அதன் பின் திரிதியை திதி, பூராடம் நட்சத்திரம் பகல் 2:18 வரை;
அதன் பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00-1:30 மணி
எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
குளிகை : காலை 10:30-12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: போட்டி, பந்தயத்தில் ஈடுபடக்கூடாது. தொழிலில் உள்ள குளறுபடியை சரிசெய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணம் கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: உங்களை சிலர் அவமதித்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

மிதுனம்: நீங்கள் சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெறுவர்.

கடகம்: எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உறவினர், நண்பர் மனதார பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இயன்ற அளவில் தான, தர்மம் செய்வீர்கள். பெண்களுக்கு பொன், பொருள் சேரும்.

சிம்மம்: எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்க தாமதம் ஆகலாம். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். உணவுப் பொருள் தரமறிந்து உண்ண வேண்டும்.

கன்னி: முக்கிய பணி நிறைவேற தாமதம் ஆகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். .தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு சில மாற்றங்களை செய்வீர்கள். அளவான பணவரவு உண்டு/ சீரான ஓய்வு உடல் நலத்திற்கு உதவும்.

துலாம்: நண்பர், உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில், திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

விருச்சிகம்: அதிக வேலைப்பளுவால் மனதில் சஞ்சலம் எழும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

தனுசு: இஷ்ட தெய்வ அருளால் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழில், வியாபாரத்தில் செய்ய அபிவிருத்தியில் பலன் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் திருப்திகர நிலை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம்: மனதில் பழைய நினைவுகள் தொந்தரவு தரும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு அதிகம் பணிபுரிவது அவசியம். எதிர்பார்த்ததை விட பண வரவு குறைவாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெற ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்ணவும்.

கும்பம்: சமூக அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்ப பிரச்னையில் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மீனம்: உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு உண்டு. விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: