Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 18/06/2019

இன்றைய நாள் எப்படி 18/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 3ம் தேதி, ஷவ்வால் 14ம் தேதி,
18.6.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி பகல் 3:12 வரை;
அதன் பின் துவிதியை திதி, மூலம் நட்சத்திரம் பகல் 12:46 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00-4:30 மணி
எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
குளிகை : பகல் 12:00-1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : துர்கை வழிபாடு.

 

மேஷம்: மனதில் பதற்றம் ஏற்படலாம்; நண்பரின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

ரிஷபம்: உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். இசைப்பாடல்களை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

மிதுனம்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும், ஆசியும் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம்: ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்

சிம்மம்: இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்; ஓரளவு பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

கன்னி: எவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடியபொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

துலாம்: உங்களின் தனித்திறமையை நண்பர் பாராட்டுவர். முயற்சிக்கு உரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.

விருச்சிகம்: பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

தனுசு: உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டி ஊக்கப்படுத்துவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திருப்திகர முன்னேற்றம் காணப்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மகரம்: சொந்த விஷயம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை உருவாக்கும். பணவரவை விட புதிய இனங்களில் செலவு ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கும்பம்: எதிர்ப்புக்களை சாதுர்யமாக வெல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித்தருவீர்கள்.

மீனம்: இடையூறு விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை காணப்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: