Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி,
17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி பகல் 2:49 வரை;
அதன் பின் தேய்பிறை பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 11:44 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண-அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
குளிகை : பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
பொது : பவுர்ணமி விரதம், சிவன் வழிபாடு, கிரிவலம் வருதல்,

 

மேஷம்: பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய தேவைகளுக்கு மட்டும் பணம் செலவு செய்வீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மூலம் மனதில் புத்துணர்வு உருவாகும்.

ரிஷபம்: அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்; எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

மிதுனம்: பொழுது போக்காக பேசுவோரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

கடகம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க முடியாத பணச்செலவு ஏற்படும். சுற்றுச்சூழ்நிலை தொந்தரவால் தூக்கம் கெடலாம். மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சி வேண்டும்.

சிம்மம்: முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். உறவினர், நண்பர் பெருமைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

கன்னி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் இடம் மாறிப்போவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.

துலாம்: பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சிரமங்களை திறமையுடன் சரிசெய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் அனுகூலத்தீர்வு கிடைக்கும்.

தனுசு: மனதில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவின் அளவு குறையலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

மகரம்: வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும்; மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு பெற அனுகூலம் வளரும்.

கும்பம்: உங்களின் இனிய அணுகுமுறை நற்பலன் தரும். உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவிpல் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: உங்கள் பேச்சு, செயலில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம்; பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: