Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி,
17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 வரை;
அதன்பின் துவாதசி திதி, பூசம் நட்சத்திரம் இரவு 8:43 வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
பொது : முகூர்த்த நாள், ஏகாதசி, பெருமாள், சூரியன் வழிபாடு.

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் மறையும். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறுகளைச் சரி செய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள்
பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

ரிஷபம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.தொழில் வியாபாரம் செழித்து வளரும். லாபம் உயரும். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லை மறையும்.

மிதுனம்: முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். நிதானமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். பிறர் பார்வையில் அதிக பணம் செலவு
செய்ய வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள்.

கடகம்: குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் புத்தாடை அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு.

சிம்மம்: நண்பரின் பேச்சால் மனம் வருந்துவீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.பணவரவு சுமாராக இருக்கும். முக்கிய செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். உடல்நலம் ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம்.

கன்னி: பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

துலாம்: அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான
பொருள் வாங்குவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் செயலை மற்றவர் குறை சொல்வர். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது அவசியமாகும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து சிந்திப்பர்.

தனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப்பணியை நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மகரம்: உறவினர் கருத்துக்களை ஏற்று செயல்படுவீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.குடும்பத்தில் சுப நிகழ்வு பற்றிய பேச்சு நடக்கும்.

கும்பம்: சகோதர வழியில் உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் உயரும். சேமிக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: சிலரது பேச்சு வருத்தம் தரலாம். குடும்பத்தினரின் ஆறுதல் நம்பிக்கையைத் தரும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: