Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/06/2019

இன்றைய நாள் எப்படி 16/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 1ம் தேதி, ஷவ்வால் 12ம் தேதி,
16.6.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி பகல் 2:56 வரை;
அதன் பின் பவுர்ணமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 11:10 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00-1:30 மணி
குளிகை : பகல் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
பொது : சூரியன் வழிபாடு. கரிநாள்.

 

மேஷம்: எதிர்மறையாக பேசுவோரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஆரவாரத்தன்மையை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

ரிஷபம்: செயல்களில் பொறுமையும், திறமையும் நிறைந்திருக்கும். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம்: உங்கள் உறவினர் அனுகூலமாக நடந்து கொள்வர். மனதில் கூடுதல் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு, திட்டமிட்டபடி நிறைவேறும். தாராள பணவரவில் சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.

கடகம்: விவாதம் செய்வதை தவிருங்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

சிம்மம்: செயல்களின் விளைவு உணர்ந்து பணிபுரிவது அவசியம். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். உற்பத்தி, விற்பனை சீராக கூடுதல் உழைப்பு உதவும். பணச்செலவில் சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.

கன்னி: மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பணவருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: உங்களை சிலர் குறை சொல்வர். உழைப்பில் கவனம் கொள்வது நல்லபலன் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். குடும்ப செலவுகளில் தாராளம் பின்பற்றுவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

விருச்சிகம்: சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். இதனால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் காணப்படும். வெகுநாள் விரும்பிய பொருளை வாங்குவீர்கள்.

தனுசு: அனுபவசாலியின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். பணவரவு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும்.

மகரம்: உங்கள் செயல்களில் எளிமையும், நிதானமும் நிறைந்திருக்கும். தொழிலில் வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி பூர்த்தி செய்வீர்கள்; நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானத்தில் சிறு அளவில் தானம், தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

மீனம்: உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு மனவருத்தத்தை தரலாம்; நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: