Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/03/2019

இன்றைய நாள் எப்படி 16/03/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம்; 2ம் தேதி, ரஜப் 8ம் தேதி,
16.3.19 சனிக்கிழமை வளர்பிறை, தசமி திதி இரவு 7:15 வரை;
அதன்பின் ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10:16 வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : ராமர், பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: எதிர்பார்த்த அனுகூல செய்தி கிடைக்கும். அன்றாட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் திருப்தியளிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

ரிஷபம்: உறவினரின் அன்புத் தொல்லைக்கு ஆளாகலாம். தொழிலில் பொறுப்பு அதிகரிக்கும். ஆதாயம் மிதமாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

மிதுனம்: மனதில் இருந்த குழப்பமான சூழ்நிலை விலகும். தொழில் வளர்ச்சியால் கூடுதல் கவுரவம் பெறுவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் தானதர்மம் செய்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெண்களுக்கு பெருமை சேர்க்கும்.

கடகம்: எவருக்கும் அளவுக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். விஷப் பிராணிகளிடம் விலகியிருப்பத நல்லது. பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.

சிம்மம்: கடந்த கால செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர்.

கன்னி: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த நன்மை தேடி வரும். தொழில் வியாபாரம் வளர்ச்சியால் ஆதாயம் உயரும். சேமிப்பு உயரும். பணியாளர்கள் பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர்.

துலாம்: நண்பரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

விருச்சிகம்: மறைமுக எதிரியை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்பச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி உண்டு.

தனுசு: வாழ்வில் இனிய அனுபவங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். வருமானம் பல மடங்கு கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலால் பெருமை தேடித் தருவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

மகரம்: முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு சலுகை பெறுவர்.புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு.

கும்பம்: உங்களின் நற்செயலை சிலர் விமர்சனம் செய்வர். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். அதிகவிலையுள்ள பொருட்களை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

மீனம்: அடுத்தவரின் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. பெண்களுக்கு குடும்பச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: