Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 15/09/2018

இன்றைய நாள் எப்படி 15/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 30ம் தேதி, மொகரம் 4ம் தேதி,
15.9.18 சனிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மாலை 6:55 வரை;
அதன்பின் சப்தமி திதி, அனுஷம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : சஷ்டி விரதம், முருகன், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படலாம். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

ரிஷபம்: உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதில் பூர்த்தியாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். பிள்ளைகள்வழியில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

மிதுனம்: உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தியும் ஆதாய பணவரவும் உண்டாகும்.குடும்பத் தேவைகளை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் வளரும்.

கடகம்: புதியவர்களிடம் நிதானித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கடனில் ஒரு பகுதி அடைபடும். செலுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: குடும்ப கஷ்டத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கன்னி: அறிவுத்திறனில் மேம்பட்டு விளங்குவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர் .பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

துலாம்: சிலரது செயல்பாடு கண்டு அதிருப்தி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

விருச்சிகம்: எதிரியால் இருந்த தொல்லை விலகும். சமயோசித செயலால் தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். குடும்பத்தினருக்காக தாராள மனதுடன் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த தரத்தேர்ச்சி கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தில் எவருடனும் விவாதம் பேசக் கூடாது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

மகரம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கும்பம்: உங்களிடம் பழகுபவர்கள் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவு நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மீனம்: தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். லாபம் சுமார். திடீர் செலவுக்காக சிறு அளவில் கடன் பெறுவீர்கள். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

 

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி, 17.7.19 புதன்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: