Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/06/2019

இன்றைய நாள் எப்படி 15/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 32ம் தேதி, ஷவ்வால் 11ம் தேதி,
15.6.19, சனிக்கிழமை வளர்பிறை, திரயோதசி திதி பகல் 3:30 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 11:10 வரை;
அதன் பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30-3:00 மணி
குளிகை : காலை 6:00-7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

 

மேஷம்: வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு உருவாகும். உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். நிகழ்வுகள் இனிதாக அமையும். தொழில், வியாபாரம் செழித்து மகிழ்ச்சி பெறுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் ஆதரவாக செயல்படுவர்.

மிதுனம்: உங்களால் உதவி பெற்று நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள். தொழில். வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும். தாராள அளவில் பணவரவு உண்டு. வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கடகம்: மனஉறுதியுடன் நேர்மை வழியில் நடை போடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

சிம்மம்: எவரிடமும் ரகசியம் சொல்ல வேண்டாம். தொழில், விற்பனை சுமாராக இருக்கும்; அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

கன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். இயந்திரப்புpரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

துலாம்: பணி நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம்: உங்கள் மீது பலரும் நல்லெண்ணம் கொள்வர். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

தனுசு: அவசரப்பணி ஏற்படலாம். அக்கம் பக்கத்தவருடன் அதிகம் பேசுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மகரம்: உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

கும்பம்: இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும்.

மீனம்: சிலர் உங்களிடம் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் போட்டி உருவாகும். அதிக உழைப்பால் உற்பத்தி மற்றும் விற்பனை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 21/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 4ம் தேதி, ஸபர் 21ம் தேதி, 21.10.19 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி ...

%d bloggers like this: