Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/03/2019

இன்றைய நாள் எப்படி 15/03/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 1ம் தேதி, ரஜப் 7ம் தேதி,
15.3.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, நவமி திதி இரவு 9:20 வரை;
அதன்பின் தசமி திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 11:44 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
பொது : காரடையான் நோன்பு, மகாலட்சுமி வழிபாடு

 

மேஷம் : நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

மிதுனம்: பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம்: சமூகத்தில் நன்மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். இயன்ற அளவில் தானம் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி: எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். சுயகவுரவத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். சீரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும்.

விருச்சிகம்: உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு சிரமம் தரலாம். தொழில் சார்ந்த இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வீர்கள். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

தனுசு: திட்டமிட்டபடி செயல் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். வருமான உயர்வால் சேமிக்க வாய்ப்புண்டு. மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கண்டு மனம் நெகிழ்வீர்கள்.

மகரம்: தாமதமான செயல் கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்பர்.

கும்பம்: புதியவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் லாபம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவால் வளர்ச்சி காண்பர். மாமன், மைத்துனரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

மீனம்: எவரிடமும் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உள்ள அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. முக்கியத் தேவைகளுக்கு சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் ஒவ்வாத அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: