Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/06/2019

இன்றைய நாள் எப்படி 14/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி,
14.6.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி மாலை 4:35 வரை;
அதன் பின் திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 11:31 வரை;
அதன் பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00-4:30 மணி
குளிகை : காலை 7:30-9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
பொது : பிரதோஷம். சிவன், மகாலட்சுமி வழிபாடு. முகூர்த்தநாள்.

 

மேஷம்: உங்கள் செயல்களில் சத்தியத்தின் தன்மை நிறைந்திருக்கும். நண்பரிடம் பெற்ற உதவிக்கு நன்றி சொல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை கிடைக்கும்.

ரிஷபம்: இனிய வார்த்தை பேசுவீர்கள். வாழ்க்கைத் தரம் வியத்தகு அளவில் உயரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

மிதுனம்: உறவினரின் பாசம் வியப்பைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். போக்குவரத்தில் கவனம் வேண்டும்

கடகம்: சொந்தப்பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்; பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுதல் பணவரவில் குடும்ப தேவை நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி: எதிர்மறையாக பேசுவோரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுவது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

துலாம்: உங்களின் அணுகுமுறை மாற்றம் நல்லபலன் தரும். அக்கம் பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு திருப்திகரமாகும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிருங்கள். சுயநலத்துடன் சிலர் உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

தனுசு: ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவீர்கள். தாமதமாகிய பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும், அதிக அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

மகரம்: உங்கள் நற்செயல் நண்பரிடம் பாராட்டு பெறும். தொழிலில் உங்கள் கடுமையான உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.

கும்பம்: உங்கள் பேச்சு, செயல் மாறுபடலாம். நண்பரின் வழிகாட்டுதல் நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை தருவீர்கள். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும்.

மீனம்: உங்கள் பேச்சு, செயலில் முரண்பாடு ஏற்படலாம்; நல்லோரின் ஆலோசனை, நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சிறப்பான தேர்ச்சி பெற முடியும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/06/2019

மேஷம்: செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். ...

%d bloggers like this: