Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/02/2019

இன்றைய நாள் எப்படி 14/02/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 2ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 8ம் தேதி,
14.2.19 வியாழக்கிழமை வளர்பிறை, நவமி திதி காலை 10:08 வரை;
அதன் பின் தசமி திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 5:41 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : குடும்ப உறுப்பினர் பாசத்துடன் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம் : பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவரின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம் : கஷ்ட சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதம் ஆகலாம்.

கடகம் : சிலர் அனுகூலம் பெற முயற்சி செய்வர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம் : வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவில் குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி : செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கியப் பணி நிறைவேறுவதில் கூடுதல் உழைப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

துலாம் : மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரிசெய்ய நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : முக்கியமான செயலில் அதிக கவனம் கொள்வீர்கள். அனுகூல சூழ்நிலை அமைந்து நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு : திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் பெறுகின்ற நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப்பொருள் தருவார்.

மகரம் : எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை தரும். பணியாளர் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கும்பம் : நேர்மை செயல்களால் அதிக நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். சத்து நிறைந்த உணவு உண்பதும் சீரான ஓய்வும் உடல்நலம் பாதுகாக்கும்.

மீனம் : மனதில் புதுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி, 17.7.19 புதன்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: