Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/01/2019

இன்றைய நாள் எப்படி 14/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி,
14.1.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 5:27 வரை;
அதன்பின் சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம் நாளை காலை 6:25 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : செயல்களில் தியாக குணம் நிறைந்திருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த குறுக்கீடு விலகும். உற்பத்தி விற்பனை செழித்து ஆதாய பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

ரிஷபம் : எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். புதிய செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்டதெய்வ அருள்பலம் துணை நிற்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு ஆசி பெறுவீர்கள்.

மிதுனம் : தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணம் வளரும். உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்கக்கூடாது.

கடகம் : முக்கியமான செயலை மறந்துவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்துவர். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம் : சிரம சூழ்நிலையை திறமையுடன் சரி செய்வீர்கள். சாமர்த்தியத்தை நண்பர் பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

கன்னி : லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

துலாம் : சிலர் தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படுவர். சுயகவுரவம் பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும்.

விருச்சிகம் : எந்த செயலையும் பரிசீலனை செய்து நடத்தவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரால் உதவி உண்டு. புதிய இனங்களில் செலவு ஏற்படலாம். உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு உருவாகும்.

தனுசு : வெகுநாள் தவம் இனிதே நிறைவேறும். உறவினர் நண்பர் பெருமையுடன் வாழ்த்துவர். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : பொது இடங்களில் எவரிடமும் வாக்குவாதம் பேச வேண்டாம். நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க வேண்டும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்

கும்பம் : எண்ணமும் செயலும் சிறந்து அதிக நன்மை தரும். பலரும் அன்பு பாராட்டுகிற புதிய சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மீனம் : நண்பரின் செயலில் குறை காண வேண்டாம். உடல் ஆரோக்கியம் பேணுவதால் செயல்களில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 14/06/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி, 14.6.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: