Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 13/10/2018

இன்றைய நாள் எப்படி 13/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 27ம் தேதி, ஸபர் 3ம் தேதி,
13.10.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 8:05 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, அனுஷம் நட்சத்திரம் மதியம் 2:40 மணி வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : நவராத்திரி 4ம் நாள், அம்பிகையை மகாலட்சுமியாக வழிபடுதல், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: சுயநலத்துடன் பழகுபவரிடம் விலகுவது நல்லது. திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வகையில் சிக்கனமாக செலவழிப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு புத்துணர்வு தரும்.

ரிஷபம்: பேச்சில் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி பெற நவீன மாற்றம் செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க வாய்ப்பு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதமான முடிவு கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதி அடைபடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம்: பணியில் கூடுதல் பொறுப்பு ஏற்படலாம். வீணாகப் பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.

சிம்மம்: வழக்கத்திற்கு மாறான பணிச்சுமையால் தொந்தரவு ஏற்படும். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம்.புதிய இனங்களில் திடீர் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி: உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மனைவி விருப்பம் அறிந்து வாங்கித் தருவீர்கள்.

துலாம்: பணிகளை நிறைவேற்ற கூடுதல் உழைப்பு அவசியம். தொழிலில் உருவாகிற இடையூறை நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம்: வெகுநாள் லட்சிய கனவு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இனிய அணுகுமுறையால் உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

தனுசு: பணிச்சுமையால் மனத்தளர்ச்சி உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னை குறையும்.தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.

மகரம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இனிய பேச்சால் நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் திருப்திகரமாக இருக்கும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை காண்பீர்கள். .முக்கியமான விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். உறவினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவால் சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அரசியல்வாதிகள் எதிர்மனப்பாங்கு உள்ளவரிடம் விலகவும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: