Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/06/2019

இன்றைய நாள் எப்படி 13/06/2019

மேஷம்: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் மற்றும் உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு நகை, புத்தாடை வாங்க யோகம் உண்டு.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். புதிய வழிகளில் பணச்செலவு அதிகரிக்கும்.

மிதுனம்: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். பொருட்கள் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

கடகம்: செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்: வெளி வட்;டார தொடர்பு, தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் உ;றவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை பெற நல்யோகம் உண்டு.

துலாம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர்; சகிப்புத் தன்மையை பின்பற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.

விருச்சிகம்: மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து பலரும் வியப்படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர்களுக்கு உதவுவீர்கள்.

தனுசு: உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளாச்சிக்கான தேவை நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

மகரம்: சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சிலமாற்றம் செய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

கும்பம்: மனதில் சங்கடம் ஏற்படலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரி செய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

மீனம்: தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நம்பிக்கையை ஏற்படுத்தும். .பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/06/2019

மேஷம்: செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். ...

%d bloggers like this: