Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 13/03/2018

இன்றைய நாள் எப்படி 13/03/2018

இன்று!
ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 24ம் தேதி,
13.3.2018 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மதியம் 2:43 வரை;
அதன் பின் துவாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1:23 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
பொது : ஏகாதசி, திருவோண விரதம், பெருமாள் வழிபாடு.

மேஷம்: உடல் ஆரோக்கியம் பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.
ரிஷபம்: புகழ்ச்சியை எதிர்பார்த்து செயல்படுவீர்கள். செயல் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தொழில் வியாபாரத்தில் சிறு குளறுபடி வந்து பின்னர் சரியாகும். லாபம் சீராக இருக்கும். வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவீ்ரகள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
மிதுனம்: கடந்தகால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல்களில் முன்யோசனை அவசியம் .தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல்முயற்சி தேவைப்படும். வரவை விட செலவு அதிகரிக்கும். பிராணிகளிடம் விலகுவது நல்லது.
கடகம்: குடும்பத்திலுள்ள சிரமமான சூழ்நிலை மாறும்.எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் மேம்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். கடன் பிரச்னை தீரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்: பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும்.தொழில் வியாபாரம் செழிதது வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி: குடும்பத்தினர் ஆதரவால் பிரச்னை தீரும். விடாமுயற்சி, உழைப்பால் தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்க
துலாம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும். சீரான அளவில் பணவரவு இருக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம்.
விருச்சிகம்: சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வெகுநாள் லட்சியம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும் .தாராள பணவரவு கிடைக்கும் .நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு: செயல்களில் கூடுதல் கவனம் தேவை. நண்பரின் ஆலோசனை நல்வழி நடத்தும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
 
மகரம்: உங்களிடம் பலரும் அன்பு பாராட்டுவர். மனதில் புதிய உற்சாகம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
கும்பம்: உங்கள் நலனுக்கு எதிரானவர்களை விட்டு விலகவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகலாம். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம்: பேச்சில் வசீகரம் வெளிப்படும். நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டை பெறுவர்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 12ம் தேதி, 18.2.19 திங்கட்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி ...

%d bloggers like this: