Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/02/2019

இன்றைய நாள் எப்படி 13/02/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 1ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 7ம் தேதி, 13.2.19 புதன்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி காலை 11:13 வரை, அதன் பின் நவமி திதி, கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:14 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00 – 1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
* குளிகை : காலை 10:30 -12:00 மணி

* சூலம் : வடக்கு
* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
* பொது : கார்த்திகை விரதம், முருகன், அம்பிகை வழிபாடு.

மேஷம் : சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராகும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். அதிக விலைமதிப்புள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

ரிஷபம் : இனிய வார்த்தை பேசி முக்கியஸ்தரின் அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத் தில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம் சம் உள்ள பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மிதுனம் : திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

கடகம் : அன்பு வழியை அதிகம் பின்பற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

சிம்மம் : புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் பெற நடைமுறைகளில் தேவையான மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கன்னி : முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் செலவும் ஏற்படும். சுற்றுக்சூழ்நிலை தொந்தரவால் நித்திரை கெடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

துலாம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். மனதை செம்மைப்படுத்தி கொள்வது அவசியம். தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : நண்பரிடம் கேட்ட கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : எண்ணமும், செயலும் உற்சாகம் பெறும். எளிமையானவருக்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம் : செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். கொஞ்சம் கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

கும்பம் : சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்புப் பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். பிள்ளைகளின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

மீனம் :நண்பரின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ஷாபான் 9ம் தேதி, 15.4.19, திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: