Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/10/2019

இன்றைய நாள் எப்படி 12/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 25ம் தேதி, ஸபர் 12ம் தேதி,
12.10.19 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 1:24 வரை;
அதன்பின் பவுர்ணமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 6:50 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம் : பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.

ரிஷபம் : எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. உபரி பணவரவில் முக்கிய தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மிதுனம் : உங்கள் மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

கடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் நிதானித்து பழகவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

சிம்மம் : சில அவசர பணிகள் உருவாகி அல்லல் தரலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்;டாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்ற பயன்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி வேண்டும்.

கன்னி : மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

துலாம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள்.

விருச்சிகம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடக்கலாம். தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். உணவு பொருள் தரமறிந்து உண்ண வேண்டும். தாயின் அன்பு, ஆசி மனதில் நம்பிக்கையை தரும்.

தனுசு: பொது இடங்களில் நிதானித்து பேச வேண்டும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி, பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்க உதவும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.

மகரம் : உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணி புரிவீர்கள். வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.

கும்பம் : வாழ்வில் முன்னர் பெற்ற அனுபவம் நல்ல பலன் தரும். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.

மீனம் : உறவினர்கள் அன்பு, பாசத்துடன் உதவுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...