Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 12/10/2018

இன்றைய நாள் எப்படி 12/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 26ம் தேதி, ஸபர் 2ம் தேதி,
12.10.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 7:46 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் 1:37 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : நவராத்திரி 3ம் நாள், அம்பிகையை வராகியாக வழிபடுதல், சதுர்த்தி விரதம், விநாயகர், மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்: உறவினரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். தொழிலுக்காக பணக்கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம்: உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறக்கலாம். இஷ்டதெய்வ வழிபாட்டால் நிம்மதி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் திருப்திகரமான அளவில் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் காண்பர். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் சலுகை கிடைக்கும்.

கடகம்: மனதில் நல்லெண்ணம் மேலோங்கும். எதிலும் சமயோசிதமாக செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

சிம்மம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். மிதமான அளவில் பணவரவு இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பெண்கள் ஒவ்வாத அழகு சாதனப் பொருள் பயன்படுத்த வேண்டாம்.

கன்னி: கடந்தகால முயற்சிக்கான பலன் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும் .ஆதாயம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். பெண்களுக்கு உறவினர் மத்தியில் கவுரவம் உயரும்.

துலாம்: உங்களின் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். தாயின் ஆறுதல் பேச்சு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கன்னி: கடந்தகால முயற்சிக்கான பலன் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும் .ஆதாயம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். பெண்களுக்கு உறவினர் மத்தியில் கவுரவம் உயரும்.

விருச்சிகம்: அனைவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் உதவி வந்து சேரும். பணவரவில் திருப்திகரமான நிலை ஏற்படும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பால் வருமானம் காண்பர். உறவினரால் உதவி உண்டு.

தனுசு: சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெணகள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மகரம்: நண்பரின் பேச்சு உற்சாகம் அளிக்கும். முக்கியமான விஷயத்தில் சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

கும்பம்: உங்கள் சிந்தனையில் புதிய மாற்றம் உருவாகும். செயல் நிறைவேற நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: முக்கிய பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழிலில், வியாபாரத்தில் சுமாரான அளவில் பணம் கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: