Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 12/08/2018

இன்றைய நாள் எப்படி 12/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி,
12.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மதியம் 2:04 வரை;
அதன் பின் துவிதியை திதி, மகம் நட்சத்திரம் இரவு 12:30 வரை;
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : 
காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : சந்திர தரிசனம், சூரியன் வழிபாடு.

மேஷம்: விரும்பாத நபரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடலாம். பெருந்தன்மையுடன் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம்.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்கும்.

ரிஷபம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறலாம். தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உணவுப் பொருள் தரமறிந்து உண்பது நல்லது. பெற்றோரின் ஆசி மனதிற்கு நம்பிக்கை தரும்.

மிதுனம்: எதிரியும் நெருங்கி வந்து நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் தேவையான வளர்ச்சிப்பணி மேற்கொள்வீர்கள். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். பிள்ளைகள் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் தெய்வ வழிபாடு சிறக்கும்.

கடகம்: அறிமுகம் இல்லாத எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு மிதமாக இருக்கும். பணியாளர்கள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.

கன்னி: தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கடந்த கால அனுபவம் மாற்றுவழிக்கு கைகொடுக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

துலாம்: மனதில் புத்துணர்ச்சி பெருகும். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி நிலை உருவாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

விருச்சிகம்: புதியவரின் நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். தாமதமான பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை கைவிடுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

தனுசு: எவரிடமும் சுய பெருமை பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமார். குடும்பத்தில் புதிய வகையில் திடீர் செலவு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சமரச முயற்சியில் பொறுமை தேவைப்படும்.

மகரம்: எதிர்பார்ப்பு நிறைவேற திட்டமிடுதல் அவசியம். தொழில், வியாபாரத்தில் தடைகளை உடனுக்குடன் சரி செய்வது நல்லது. செய்வீர்கள். லாபம் சுமார். பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படலாம்.

கும்பம்: செயல்களில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல சூழ்நிலை உருவாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க யோகம் உண்டு.

மீனம்: புதிய அணுகுமுறையால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்..உபரி வருமானம் சேமிப்பாக மாறும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

 

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 3ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 9ம் தேதி, 15.2.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: