Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 12/03/2018

இன்றைய நாள் எப்படி 12/03/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 28ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 23ம் தேதி,
12.3.2018 திங்கட்கிழமை, தேய்பிறை, தசமி திதி மதியம் 12:45 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 11:56 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
* பொது : சிவன் வழிபாடு.

மேஷம்: யாரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கு புதிய அணுகுமுறை உதவும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். நல்லோரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. பெண்களுக்கு வீட்டுச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: நண்பரிடம் சொந்த விஷயம் பேசுவீர்கள். நண்பர் மூலம் தேவையான உதவி கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

கடகம்: நீங்கள் எதிர்பார்த்த நல்லசெய்தி வந்து சேரும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

சிம்மம்: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதம் பேச வேண்டாம் .மன அமைதியை பாதுகாப்பது நல்லது .தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி: பொறுப்புணர்வுடன் அன்றாடப்பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். முக்கிய தேவைக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம். பிள்ளைகளால் உதவி உண்டு.

துலாம்: கடந்த கால உழைப்புக்குரிய நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.இயலாதவர்களுக்கு தானம், தர்மம் செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: வழக்கத்திற்கான மாறான திடீர் பணி குறுக்கிடலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாரான அளவில் இருக்கும்.பெண்களுக்கு நகை, பணம் பாதுகாப்பில் கவனம் தேவை.

தனுசு: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும். வருமானம் பன்மடங்கு உயரும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மகரம்: விடாமுயற்சி எதிலும் தேவை. பொது விவகாரத்தில் நிதானமுடன் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் உதவி செய்வர்.

கும்பம்: நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும் .குடும்பத்தில் மங்கல நிகழ்வு பற்றிய பேச்சு நடக்கும்.

மீனம்: சான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். திட்டமிட்ட செயல்கள் புதிய அணுகுமுறையால் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உயரும். வருமானம் அதிகரிக்கும். அரசுவகையில் நன்மை உண்டாகும். எதிரியால் இருந்த தொல்லை மறையும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 12ம் தேதி, 18.2.19 திங்கட்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி ...

%d bloggers like this: