Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/02/2019

இன்றைய நாள் எப்படி 12/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 29ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 6ம் தேதி, 12.2.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, சப்தமி திதி காலை 11:44 வரை; அதன்பின் அஷ்டமி திதி, பரணி நட்சத்திரம் மாலை 6:18 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00- 4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
* குளிகை : மதியம் 12:00 – 1:30 மணி
* சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
* பொது : ரதசப்தமி, சூரியன், துர்க்கை, பைரவர் வழிபாடு.

மேஷம் : மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழந்து போகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாப விகிதம் திருப்திகரமாகும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.

ரிஷபம் :செயலில் குளறுபடி ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை சிரமங்களை சரி செய்ய உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற மென்மையான அணுகுமுறை அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். நித்திரை தாமதமாகலாம்.

மிதுனம் :முன்னர் செய்த உதவிக்கான நற்பலன் தேடிவரும். புதிய நம்பிக்கையுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கடகம் : பிறருக்கு உதவுகின்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இளமைக்கால இனிய நினைவு மகிழ்ச்சி தரும்.

சிம்மம் : சிலர் அதிக எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம்.

கன்னி : தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சாதக சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

துலாம் : உறவினர் பாசத்துடன் பழகுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.

விருச்சிகம் : பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். விலகிச் சென்ற உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி எளிய முயற்சியால் நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணம் வாங்க நல்யோகம் உண்டு.

தனுசு : சுற்றுப்புறச் சூழ்நிலை தொந்தரவு தரலாம். நிதானித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

மகரம் : சிலரது பேச்சு, மனம் தளரச் செய்யும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனநடை நல்லது.

கும்பம் : மனதில் இருந்த கவலை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி வளரும்.

மீனம் : நண்பரின் ஆலோசனையால் நன்மை அடைவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். குடும்பச் செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: