Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/03/2018

இன்றைய நாள் எப்படி 11/03/2018

இன்று!

ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 22ம் தேதி,
11.3.2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 10:39 வரை;
அதன் பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:23 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : சூரியன், ஆஞ்சநேயர் வழிபாடு.

மேஷம்: முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள். குடும்பத்தினரி்ன் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை சரிசெய்வீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும்.உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

ரிஷபம்: சுயதேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம்.தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: எதிரியால் இருந்த தொந்தரவு விலகும்.புதிய முயற்சிகள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.நிலுவைப்பணம் வசூலாகும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றி அன்பும் ஆசியும் பெறுவீர்கள்.

கடகம்: வெகுநாள் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். உறவினர்களால் உதவி உண்டு. தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பரால் உதவி உண்டாகும். மிதமான பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில் திடீர் செலவு ஏற்படலாம்.உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு உருவாகும்.

கன்னி: பொது இடங்களில் எவரிடமும் வாக்குவாதம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வது நல்லது.

துலாம்: எண்ணமும், செயலும் ஒன்றுபட்டு நன்மை காண்பீர்கள். பலரும் அன்பு பாராட்டுகிற புதிய சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் .வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

விருச்சிகம்: நண்பரின் செயலில் குறை காண வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சராசரி அளவில் இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: பேச்சு, செயலில் தியாக குணம் நிறைந்திருக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு விலகும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

மகரம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படுவர். பெருந்தன்மையுடன் நடந்து சுயகவுரவம் காப்பது நல்லது.தொழில் வியாபாரத்தில் செழிக்க புதிய முயற்சி ஈடுபடுவீர்கள். சுமாரான அளவில் வருமானம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும்.

கும்பம்: லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும்.எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி மனம் மகிழ்வீர்கள்.பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்: சிரமமான சூழலை சாதுர்யமாக சரி செய்வீர்கள். உங்களின் சாமர்த்தியத்தை நண்பர் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள் .மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 12ம் தேதி, 18.2.19 திங்கட்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி ...

%d bloggers like this: