இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 24ம் தேதி, ரபியுல் அவ்வல் 12ம் தேதி,
10.11.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி மாலை 5:30 வரை;
அதன்பின் சதுர்த்தசி திதி, ரேவதி நட்சத்திரம் மாலை 6:50 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : சூரியன் வழிபாடு, முகூர்த்தநாள்
ரிஷபம் : தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு செழிக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.
கடகம்: உங்கள் எண்ணமும் செயலும் மாறுபடலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
துலாம்: இனிய எண்ணங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பண வரவில் கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்: செயல்களில் அனுகூலம் பெற கூடுதல் உழைப்பு உதவும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.
மகரம் : உங்கள் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் இனிய அணுகுமுறையால் வியத்தகு வளர்ச்சி பெறும். பண வரவில் கூடுதல் லாபம் கிடைக்கும். உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை உண்டு.
மீனம் : சுற்று புற சூழ்நிலை உணர்ந்து செயல் பட வேண்டும். தொழிலில் அளவான மூலதனம் போதும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE