Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 10/03/2018

இன்றைய நாள் எப்படி 10/03/2018

இன்று!
ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 21ம் தேதி,
10.3.2018 சனிக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 8:40 வரை;
அதன் பின் நவமி திதி மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம் : தேவையற்ற விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம் : மற்றவர் தேவையறிந்து உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்படுகிற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்

மிதுனம் : நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கடகம் : எதிர்கால திட்டங்கள் சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம் : நண்பரிடம் வீண் பேச்சு வேண்டாம். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாகும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.

சிம்மம் : நண்பரிடம் வீண் பேச்சு வேண்டாம். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாகும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.

கன்னி : எதிரியும் கூட பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

துலாம்: புதிய சவால்களை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். எதிரியும் வியந்து பார்க்கின்ற நன்னிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவி பெற யோகம் உண்டு.

விருச்சிகம் : பொது இடங்களில் நிதானமுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பணவரவு சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

தனுசு : உறவினரால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். முக்கியபணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

மகரம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சீர் பெற கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்பத் தேவைக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வேண்டாம். குழந்தைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கும்பம் : மன உறுதியுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். தாமதமான பணிகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்தியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர்.

மீனம் : மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். திட்டமிட்ட பணி எளிமையாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 03/11/2018

இன்று விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, ஸபர் 24ம் தேதி, 3.11.18 சனிக்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: