Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/07/2019

இன்றைய நாள் எப்படி 09/07/2019

மேஷம்: வாழ்வில் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் விதத்தில் பணிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம்: அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். மிதமான பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்வு மேம்பட உதவுவீர்கள். பெண்கள் தாய்வீட்டாரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர்.

மிதுனம்: உங்களின் பேச்சை சிலர் தவறாக புரிந்து கொள்வர். தொழில் வியாபார நடைமுறையில் குறுக்கீடு வந்து சரியாகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

கடகம்: உற்சாகமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். வெகுநாள் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பர்களின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

சிம்மம்: பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுப் பொருட்களை தவிர்க்கவும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.

கன்னி : மனதில் தன்னம்பிக்கை உருவாகும். தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். லாபம் பன்மடங்கு உயரும். அந்தஸ்து மிக்கவர்களின் நட்பும், பாராட்டும் கிடைக்கும். உறவினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

துலாம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அனைவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

தனுசு: தொல்லை கொடுத்தவர் இடம் மாறிச் செல்வர். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் புகுந்த வீட்டினரால் பாராட்டப்படுவர்.

மகரம்: சிலர் உங்களிடம் சுயநலத்துடன் பழகுவர். தொழில், வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை மாற்று உபாயத்தால் சரிசெய்வீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: யாரிடமும் வீட்டு பிரச்னையை பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளில் தாமதம் ஏற்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மீனம்: குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி, 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...