Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/06/2019

இன்றைய நாள் எப்படி 09/06/2019

மேஷம்: சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: உங்களின் எதார்த்த பேச்சு, சிலர் மனதை பாதிக்கலாம். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும்.

மிதுனம்: தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலம்பெறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் கிடைக்கும்.

கடகம்: நிகழ்வுகள் மாறுபட்டதாக இருக்கும். உங்களிடம் பழகுகிற நல்லவரையும் தவறாக கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக பணிபுரிவது அவசியம். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். சத்தான உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.

சிம்மம்: பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்டதெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கன்னி: நிகழ்வுகளை பார்த்து அதிருப்தி கொள்வீர்கள். நிலுவைப்பணி துரிதகதியில் செயல்பட வைக்கும். தொழில், வியாபார நடைமுறை சீராக தேவையான அளவில் மாற்றம் செய்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் இலகுவாகும்.

துலாம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதற்கேற்ப அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்: மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தனுசு: தொடர்பில்லாத பணி குறுக்கிட்டு சிரமம் தரலாம். செயல்களில் முன்யோசனை அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க, நண்பர் உதவுவர்..கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

மகரம்: பணிகள் நிறைவேற தாமதமாகலாம். அனுபவசாலியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள்.. அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம்.

கும்பம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் சிறப்பாக முன்னேற்றமும், பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

மீனம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுவோரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு உண்டு. பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 7ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 24ம் தேதி, 19.2.2020 புதன்கிழமை, தேய்பிறை, ஏகாதசி ...

%d bloggers like this: