Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 09/03/2018

இன்றைய நாள் எப்படி 09/03/2018

இன்று!
ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 20ம் தேதி,
9.3.2018 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 6:56 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, கேட்டை நட்சத்திரம் அதிகாலை 5:49 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : 
காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : மகாலட்சுமி,பைரவர் வழிபாடு.

மேஷம் : முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. நிதானித்து பேசுவதால் நற்பெயரை பாதுகாக்கலாம். தொழில், வியாபார நடைமுறை மந்தமாக இயங்கும். சுமாரான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

ரிஷபம் : மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும். உறவினரால் உதவி கிடைக்கும்.

மிதுனம் : இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். சிறு செயலையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவைத் தரும். தாராள பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

கடகம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

சிம்மம் : மற்றவரின் புகழ் வார்த்தைகளை நம்ப வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கன்னி : தாமதமான செயலில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.

துலாம் : இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். உறவினர் வழியில் செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.

விருச்சிகம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு : மனதில் குழப்பம் தேவையற்ற சிரமம் தரலாம். நண்பரின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில் இலக்கு தாமதமாகப் பூர்த்தியாகும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்கான பணச்செலவு அதிகரிக்கும்.

மகரம் : கடந்த கால செயலுக்கு உரிய பலன் தேடி வரும். அவமதித்தவர் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம் : மனதில் உற்சாகமும், செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். விலகிச்சென்றவரும் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும்.

மீனம் : எந்த செயலிலும் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறையில் உருவாகிற இடையூறுகளை உடனடியாக சரிசெய்வது அவசியம். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் தகுதிக்கு மீறி செலவு செய்ய வேண்டாம்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/02/2019

இன்று! விளம்பி வருடம், மாசி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 12ம் தேதி, 18.2.19 திங்கட்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி ...

%d bloggers like this: