Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/11/2019

இன்றைய நாள் எப்படி 08/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 22ம் தேதி, ரபியுல் அவ்வல் 10ம் தேதி,
8.11.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி பகல் 1:38 வரை;
அதன்பின் துவாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் பகல் 2:01 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம்காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம்பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம்மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : ஏகாதசி விரதம், விஷ்ணு வழிபாடு.

மேஷம்: உங்களை அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவார். பெருந்தன்மையுடன் ஏற்று கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: உங்களின் கடந்த கால உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். பண வரவு திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மிதுனம் : எவரிடமும் நிதானித்து பேச வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு சிறு அளவில் பண கடன் பெறுவீர்கள். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம்: உங்களை சிலர் குறை சொல்வர். செயல்களில் தேவையான சுறுசுறுப்பு அவசியம். தொழிலில் உள்ள நிலுவை பணி தாமதமின்றி நிறைவேற்றவும். எதிர்பார்த்த பணவரவு குறையலாம். இசை பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

சிம்மம் : சந்தோஷ நினைவுகள் மனதை உற்சாகப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பண வரவில் லாப விகிதம் கூடும். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.
கன்னி : உங்களின் சிறிய முயற்சியும் அதிக நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறி மன நிறைவை ஏற்படுத்தும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும். விருந்தில் பங்கேற்பீர்கள்.
துலாம்: எதிர்மறையாக பேசுபவரிடம் விலகவும். தொழில், வியாபார இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். அளவான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் பண செலவு ஏற்படலாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.
விருச்சிகம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நலம் விரும்புபவரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழிலில் நிலுவை பணியை நிறைவேற்றுவது அவசியம். பண வரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
தனுசு: உங்கள் நண்பரிடம் சொந்த விஷயம் பேசுவீர்கள். எதிர் கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.
மகரம் : வழக்கத்திற்கு மாறான பணியினால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அரசின் சட்ட திட்டத்தை கூடுதலாக மதித்து நடக்க வேண்டும். தொழிலில் அளவான மூலதனம் போதும். பண வரவில் சுமாரான நிலைமை உண்டு. பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
கும்பம் : உங்கள் நட்பின் பெருமையை உணருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. தாராள பண வரவில் நிலுவை பண கடன் செலுத்துவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி வளரும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.
மீனம்: நிகழ்வுகள் மனதில் சங்கடம் ஏற்படலாம். சூழ்நிலை உணர்ந்து எவரிடமும் பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர புதிய நுட்பங்கள் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/07/2020

இன்று!                              ...