Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி,
7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 6:47 வரை,
அதன் பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 2:04 வரை,
அதன் பின் அசுவினி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம் : பகைவரிடம் விலகி சுய கவுரவம் பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணி புரிவது அவசியம். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச கூடாது.
ரிஷபம் : பொது நலன் கருதி செயல்படுவீர்கள். இதனால் நற்பெயரும் புகழும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.
மிதுனம் : மனதில் புத்துணர்வு உருவாகும். பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் செழிக்கும். உபரி பண வரவு சேமிப்பாகும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.
கடகம் : பணிகளில் குளறுபடி ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.
சிம்மம் : சுற்றுப்புற சூழல் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பண வரவு கிடைக்கும். நிர்ப்பந்தத்தின் பேரில் அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
கன்னி : உங்கள் பேச்சு, செயலில் நிதானம் வேண்டும். புதியவர்களின் வருகையால் தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
துலாம் : ஆன்மிக சிந்தனையுடன் பணி புரிவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் புதிய சாதனை ஏற்படும். பண வரவில் லாபம் கூடும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: எதிர்ப்பாளரால் உருவான தொந்தரவு விலகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

தனுசு : பொது இடங்களில் எவருடனும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.
மகரம் : தொந்தரவு விலகி அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பண வரவு கிடைக்கும். குடும்ப தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். பணியாளர் சிறப்பாக பணி புரிந்து பாராட்டு பெறுவர்.
கும்பம் : மனதில் உறுதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடி சரியாகும். குடும்ப தேவைகளுக்கான பண செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர் தருகின்ற உணவு உண்ணக்கூடாது.
மீனம் : பணியில் நேர்த்தியும், கலை ரசனையும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவை பணமும் வரவாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...