Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/08/2019

இன்றைய நாள் எப்படி 07/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 22ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி,
7.8.19, புதன்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி மாலை 5:37 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 3:39 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம்,சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00–1:30 மணி
எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
குளிகை : காலை 10:30–12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : கருட ஜெயந்தி, கருடன், பைரவர், நரசிம்மர் வழிபாடு.

 

மேஷம் : உங்கள் செயல்களில் திறமை பரிமளிக்கும். நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதியவழி உருவாகும். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : குடும்ப உறுப்பினர் அதிக பாசம் கொள்வர்.தடைகளை தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றமாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

மிதுனம் : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையலாம்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். புத்திரரை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை வேண்டும்.சுற்றுச் சூழ்நிலையின் தொந்தரவினால் நித்திரை தாமதமாகலாம்.

கடகம் : சொந்த நலனில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சு சிலரிடம் அதிருப்தியை உருவாக்கலாம். தொழில், வியாபாரம் சீராக அதிகம் உழைப்பது நல்லது. ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிம்மம் : செயல்களில் நேர்த்தியும், திறமையும் மிகுந்திருக்கும்.தொழில், வியாபாரம் சிறந்து மனதில் உற்சாகம் பெறுவீர்கள்.சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும்.சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை விலகும்.

கன்னி : எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது.தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.பொருட்கள் இரவல் கொடுக்க வாங்க கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

துலாம் : அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி காட்டும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

விருச்சிகம் : உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம்.நண்பரின் ஆலோசனை நம்பிக்கை வளர்க்கும்.தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும்.உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும்.பொருட்கள் இரவல் கொடுக்க வேண்டாம்.

தனுசு : உங்கள் செயலில் மதிநுட்பத்திறன் நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.உபரி பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : குடும்பத்தினரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும்.பணவரவும், நன்மையும் திருப்திகரமாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் : பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியமாகும்.தொழில், வியாபாரம் சுமுகமாக இருக்கும்.அளவான பணவரவு கிடைக்கும்.உறவினர் வகையில் பணச்செலவு ஏற்படலாம்.பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம் : அவசரப்பணி ஏற்படலாம்;.சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற கூடுதல் உழைப்பு பயன்தரும்.சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி, 7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: