Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி,
6.12.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி நாள் முழுவதும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11:42 வரை,
அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : மகாலட்சுமி வழிபாடு. முகூர்த்த நாள்.

 

மேஷம் : உங்களின் யதார்த்த பேச்சு சங்கடம் தரலாம். தொழில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
ரிஷபம் : எவரிடமும் பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உபரி பண வரவு கிடைக்கும். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.
மிதுனம் : சமூக நிகழ்வுகள் புதிய அனுபவம் தரும் .முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தேவையான பணி புரிவீர்கள். நிலுவை பணம் வசூலாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
கடகம் : பணிகள் நிறைவேற நண்பரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த சிரமங்களை ஓரளவு சரி செய்வீர்கள். பண வரவை விட செலவு அதிகரிக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
சிம்மம் : உறவினர் ஒருவரின் பாசம் வியப்பை தரும். தொழில், வியாபாரத்தில் ஆரவாரம் வராமல் செயல்பட வேண்டும். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றவும்.
கன்னி : மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். இசை பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
துலாம் : நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட அபிவிருத்தி பணி நிறைவேறும். கூடுதல் பண வரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.
விருச்சிகம் : நண்பர்களிடம் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்க அனுகூலம் உண்டு. விருந்து, விழாவில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.
தனுசு : போட்டி, பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். உறவினர் வகையில் பண செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும்.
மகரம் : மனதில் இருந்த கவலை தீரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை வளரும்.

கும்பம் : நண்பருக்கு சிறு அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மீனம் : புதியவர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். வெகு நாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...