Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/12/2019

இன்றைய நாள் எப்படி 04/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி,
4.12.19 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 2:36 வரை,
அதன் பின் நவமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 6:37 வரை,
அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : அம்பிகை, விஷ்ணு வழிபாடு.

 

மேஷம் : மனதில் புத்துர்ணர்வு பிறக்கும். அடுத்தவர் வியக்கும் வகையில் பணி புரிவீர்கள். தொழிலில் உபரி பண வருமானம் கி;டைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம் : குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பண வரவு அதிகரித்து வாழ்க்கை தரம் உயரும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.
மிதுனம் : பிடிவாத குணத்தால் அவ பெயர் ஏற்படலாம். தொழிலில் அனுகூலம் பாதுகாக்க அதிக உழைப்பு உதவும். புதிய இனங்களில் பண செலவு அதிகரிக்கும். வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். பெற்றோரின் ஆலோசனை நல் வழி உருவாக்கும்.
கடகம் : சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். சொந்த பணியில் அக்கறை கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு உதவும். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
சிம்மம் : மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். தொழிலில் இருந்த தாமதம் விலகி உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவு கிடைக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கன்னி : உங்களின் அனுபவ அறிவு பரிமளிக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் அதிகரிக்கும். ஆதாய பண வரவில் குடும்ப தேவை நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

துலாம் : பணிகளில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் மேம்பட நண்பரின் ஆலோசனை உதவும். சராசரியை விட பண செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவருக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

விருச்சிகம் : உறவினரின் செயலை விவாதிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை தாமத கதியில் இயங்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும். அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்பத்தினர் ஒற்றுமை முக்கிய தேவையாகும்.
தனுசு : நற்குணம் உள்ளவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். வெகு நாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
மகரம் : திட்டம் நிறைவேறும் முன் முடிவை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற மாற்று உபாயம் பயன்படும். அளவான பண வரவு கிடைக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும்.
கும்பம் : மனதில் உதித்த திட்டம் செயல் வடிவம் பெறும். நண்பரின் உதவி வியப்பை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம் : செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பண செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி, 7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: