Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/12/2019

இன்றைய நாள் எப்படி 03/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 17ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி,
3.12.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 12:35 வரை,
அதன் பின் அஷ்டமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 4:12 வரை,
அதன் பின் சதயம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : துர்கை வழிபாடு. கரிநாள்.

 

மேஷம் : மனதில் புதிய நற் சிந்தனை உருவாகும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கை தரம் உயரும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம் : உங்களின் நற்செயல் பலரின் அன்பை பெற்று தரும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
மிதுனம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். கொஞ்சம் கடன் பெற நேரிடலாம். அதிக விலையுள்ள பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம்.
கடகம் : உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது.
சிம்மம் : சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று மன நிறைவை தரும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். பெண்கள் நகை, புத்தாடை வாங்க அனுகூலம் உண்டு.
கன்னி : பணிகளில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். அளப்பரிய வகையில் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.
துலாம் : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பண வரவுக்கேற்ப செலவுகளை மேற்கொள்ளவும். வெளியூர் பயணம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும.
விருச்சிகம் : உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். பொறுமை அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு உதவும். ஆடம்பர பண செலவு தவிர்க்கவும். தாயின் தேவையை நிறைவேற்றுவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.
தனுசு : அன்பு நிறைந்த மனதுடன் பழகுவீர்கள். சமயோசித செயலால் தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.
மகரம் : புதிய திறமைகளை வளர்த்து கொள்வது நல்லது. தொழிலில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். அளவான பண வரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.
கும்பம் : குடும்ப உறுப்பினர் அதிக பாசம் கொள்வர். தடைகளை தகர்த்தெறிய தகுந்த பணி புரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றமாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.
மீனம் : எதிர்ப்பாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். புத்திரரின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை தேடி தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி, 7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: