Home / உள்நாட்டு செய்திகள் / இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இன்று (31) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பாடசாலைகளில் விடுறை வழங்கப்படுவதற்கு முன்னர், அனைத்துப் பாடசாலை வளாகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களில் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: