Home / உலகச் செய்திகள் / இன்று பப்புவா நியூகினியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

இன்று பப்புவா நியூகினியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூகினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று அதிகாலை 7 ரிக்டெர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ராபவுல் நகரின் தென்னிகிழக்கே 200 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 40 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 0.3 மீற்றருக்கு சுனாமி அலைகள் எழக் கூடும் எனவும் இது பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவுகளை தாக்க கூடும் எனவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் இன்னும் எவயைும் கிடைக்கப் பெறவில்லை என அந் நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று, புவியியல் ரீதியாக சுறுசுறுப்பான பசிபிக் வளையத்தில் அமர்ந்திருக்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் சுமார் அங்கு 7.5 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டு 100 உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

நாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா

என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ...

%d bloggers like this: