Home / உள்நாட்டு செய்திகள் / இன்று நாளையும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் வளிமண்டலவில் திணைக்களம்!

இன்று நாளையும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் வளிமண்டலவில் திணைக்களம்!

இன்று நாளையும் நாட்டை ஊடறுத்தும், கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என்றும், குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்  என தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்தோடு ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதுடன், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவில் திணைக்களம் கோரியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: