Home / உள்நாட்டு செய்திகள் / இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரிகா சந்திப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரிகா சந்திப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்­கை­யின் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா இரு­வ­ரும் நேற்றைய  தினம் சந்­தித்­துக் கலந்­துரை­யா­டி­யுள்­ள­னர்.

மிகச் சமீ­பத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த இந்­தி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த நிலை­யில், தற்­போது சந்­தி­ரி­கா­வும் அங்கு சென்­றுள்­ளமை கொழும்பு அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வு­டன் தற்­போது கூட்­டுச் சேர்ந்­துள்­ளார். இந்­தக்­கூட்டை சந்­தி­ரிகா கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­றார்.

அத்தோடு தீவிர அர­சி­லுக்­குள் வரும் நகர்­வை­யும் அவர் சமீப கால­மாக வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றார். மைத்­திரி தலைமை தாங்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் சந்­தி­ரி­கா­வுக்கு ஆத­ர­வா­ன­வர்­கள் உள்­ள­மை­யால் அந்­தக் கட்­சிக்­குள் விரி­சல் ஏற்­ப­டும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: