Home / விளையாட்டுச் செய்திகள் / இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 வது கடைசி போட்டி RADIOTAMIZHA

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 வது கடைசி போட்டி RADIOTAMIZHA

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (10, வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இலங்கை இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் மோசமாக உள்ளது. குஷால் பெரைராவை தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இதை சரி செய்ய வேண்டிய நெருக்கடி இந்த அணி வீரர்களுக்கு உள்ளது.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இசுரு உதனா இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணி ஸிம்பாப்வே பயணம் RADIOTAMIZHA

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இவ் வருடம் தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை, முதலாவது வெற்றியை சுவைக்கும் நம்பிக்கையுடன் ஸிம்பாப்வே நோக்கி ...

%d bloggers like this: