Home / இந்திய செய்திகள் / இந்தியாவில் 7 தமிழர்களின் விடுதலை ஆளுநர் மாளிகை அறிக்கை!

இந்தியாவில் 7 தமிழர்களின் விடுதலை ஆளுநர் மாளிகை அறிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுதான் ஆளுநரின் கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என நேற்று செய்திகள் வெளிவந்திருந்தன.

என்னும் குறித்த செய்தியை அளுநர் அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. தாம் அவ்வாறு எந்த பரிந்துரை அறிக்கையையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About Tharshi

x

Check Also

ரஜினிகாந் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இவை. 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ...

%d bloggers like this: