Home / உலகச் செய்திகள் / இங்கிலாந்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு!!

இங்கிலாந்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு!!

இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடக்கு இங்கிலாந்து, தெற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நார்த் வேல்ஸ் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 104 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் போர்ட்ரீத் Portreath துறைமுகத்தில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

இந்த நிலையில் காற்றின் வேகத்தைத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மழை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாகாண நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

மொசம்பிக் நாட்டில் புயல் , வெள்ளத்தால் 1000 பேர் பலி-6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க ...

%d bloggers like this: