Home / இந்திய செய்திகள் / ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. அதனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்ற பொழுது ஒருவர் தப்பியோட மற்றொருவர் சிக்கிக் கொண்டார்.

மேலும் விசாரணையில் அவர் அரக்கோணத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்றும், காரில் தமிழகத்திற்கு 10 செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் நென்ரகுண்டா வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 60 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட பிரவீன்குமாரை கைது செய்துள்ள ஆந்திர மாநில போலீசார் தப்பியோடிய அந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் ...

%d bloggers like this: